உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாக்டர் அப்துல்கலாம் நகரில் மனை விற்பனை ஜரூர்

டாக்டர் அப்துல்கலாம் நகரில் மனை விற்பனை ஜரூர்

சிதம்பரம் : அன்பு ரியல் எஸ்டேட் சார்பில் அப்துல்கலாம் நகரில் மனை வாங்கியவருக்கு பத்திரபதிவு ஆவணத்தை நிர்வாக இயக்குனர் அன்பு வழங்கினார். சிதம்பரம்- - சீர்காழி புறவழிச்சாலையில், வல்லம்படுகை வேளக்குடி அருகே டாக்டர் அப்துல்கலாம் நகர் என்ற புதிய மனைப்பிரிவு சிறப்பு விற்பனை, நடந்து வருகிறது. அன்பு ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர், அன்பு, மனை வாங்கியவருக்கு புதிய மனைப் பிரிவுக்கான இலவச பத்திர பதிவுக்கான ஆவணத்தை வழங்கினார். தொடர்ந்து அவர் கூறுகையில், அன்பு ரியல் எஸ்டேட் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் புதிய மனை பிரிவுகளை ஏற்படுத்தி, டி.டி.சி.பி., மற்றும் ரெரா அங்கீகாரம் பெற்ற மனைகளை விற்பனை செய்து வருகிறோம். தற்போது சிதம்பரம் - சீர்காழி புறவழிச் சாலையில், வல்லம்படுகை வில்லியம்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி அருகில் உள்ள எச்.பி. பெட்ரோல் பங்க் அருகில் டாக்டர் அப்துல்கலாம் நகர் புதிய மனை அமையப்பட்டுள்ளது. மனைப்பிரியில் 35 அடி தார்சாலை வசதி, 20 அடியில் சுத்தமான குடிநீர் வசதி, மின்சார வசதி, பூங்கா. காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டு மிகக் குறைந்த விலையில் மனைகள் விற்கப்படுகிறது.சாலையோரம் மனைப் பிரிவு உள்ளதால் வாடிக்கையாளர்கள் வீடு கட்டி உடனடியாக குடியேறும் வகையில் மனை பிரிவு அமைந்துள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி