உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொக்லைன் சிறைபிடிப்பு

ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி பொக்லைன் சிறைபிடிப்பு

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே கோவில் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, கிராம மக்கள் பொக்லைனை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெண்ணாடம் அடுத்த மோசட்டை கிராமத்தில் வீரனார் கோவில் செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். நேற்று காலை 7:00 மணியளவில் தனிநபர் கோவில் செல்லும் பாதையை பொக்லைன் வரவழைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.தகவலறிந்த கிராம மக்கள் கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிக்கக்கூடாது என, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்தனர். தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று சாமாதானம் செய்து, வருவாய் துறையினர் மூலம் அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று, அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி