உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் 700 பேர் மீது போலீஸ் வழக்கு

அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர் 700 பேர் மீது போலீஸ் வழக்கு

கடலுார் : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்திற்கு எதிராக கடலுாரில் தடையை மீறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.,வினர் மற்றும் தே.மு.தி.க., வினர் 700 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடலுார் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க., அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று முன்தினம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து, கடலுார் புதுநகர் போலீசார் அனுமதி இல்லாமல் பொது இடத்தில் அரசு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டதாக, மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் சம்பத், சொரத்துார் ராஜேந்திரன், எம்.எல்.ஏ., சத்தியா பன்னீர்செல்வம் உள்ளிட்ட 500 அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தே.மு.தி.க.,:

கடலுாரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து உள்ளிட்ட தே.மு.தி.க.,வினர் 200 பேர் மீது, புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை