உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பண்ருட்டி, : பண்ருட்டியில் நடந்த தமிழக அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, எஸ்.பி,. ராஜாராம் பாராட்டினார்.பண்ருட்டி ஜான்டூயி பிரைமரி பள்ளி வளாகத்தில், கிங் செஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அளவில் கடந்த 22ம் தேதி முதல் 26 வரையில், 25 வயதுகுட்பட்டவர்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், ஓபன் பிரிவில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த இளஞ்சேரலாதன் முதல் பரிசு பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். 2ம் பரிசு கோகுலவிஷ்ணு பெற்றார். 3ம் பரிசு மதுரை மாவட்டத்தை சேர்ந்த யஷ்வந்த் பெற்றார்.25 வயதுகுட்பட்ட பெண்கள் பிரிவில் சென்னை சேர்ந்த திரிஷா முதல் பரிசு பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். திருவள்ளுவர் மாவட்டத்தை சந்தானலட்சுமி 2ம் பரிசும், சென்னை நிஷாந்தினி 3ம் பரிசும் பெற்றனர்.பரிசளிப்பு விழாவில் பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். தொழிலதிபர் அருள், ரோட்டரி சங்க செயலர் செந்தில்குமார், செஸ் கழக தலைவர் சேகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செஸ் கழக செயலாளர் பாண்டியன் வரவேற்றார். கடலுார் எஸ்.பி., ராஜாராம் பரிசு வழங்கி பாராட்டினார்.கிங் செஸ் அகாடமி செயலாளர் சீத்தாபாண்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி