உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறைகேட்க வந்த அமைச்சரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் திட்டக்குடி அருகே பரபரப்பு

குறைகேட்க வந்த அமைச்சரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் மக்களிடம் குறைகேட்க வந்த அமைச்சரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் நேற்று காலை அமைச்சர் கணேசன் பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வரும் வழியிலேயே அமைச்சர் கணேசன் காரை வழிமறித்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லை என முறையிட்டனர்.உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த அமைச்சரிடம் பெண்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை, மழை நேரத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது, அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் தி.மு.க.,நிர்வாகிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின், முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித்தவும், நுாறுநாள் வேலை முறையாக வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து இடைச்செருவாய் கிராமத்தில் 16.4 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் புதிய குடிநீர் இணைப்பு வழித்தடங்களை திறந்து வைத்து மக்களின் குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். பாளையம் கிராமத்தில் 11.5லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். ஆர்.டி.ஓ.,சையத் மெஹ்மூத், தாசில்தார் அந்தோணிராஜ், பி.டி.ஓ.,க்கள் தண்டபாணி, வீராங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை