உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்

ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்

விருத்தாசலம்: விருத்தாசலம் இருப்புப்பாதை ரயில்வே போலீசார் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விருத்தாசலம் ரயில் நிலைய முகப்பில் உள்ள கிருஷ்ணசாமி உதவி பெறும் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.எஸ்.ஐ., சுரேஷ் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.அதில், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், சமூக சீர்கேடு, எதிர்கால பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, நடைமேடை1ல், காரைக்கால் - பெங்களூரு பாசஞ்சர் ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை