உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சூறைக்காற்றுடன் மழை: நெற்பயிர்கள் சேதம்

சூறைக்காற்றுடன் மழை: நெற்பயிர்கள் சேதம்

கடலுார், : கடலுார் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால், நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடந்த பிப்., மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து, அக்னி நட்சத்திரம் துவங்கியதும் மாவட்டத்தில் வெயில் சதம் அடித்தது. ஆனால், கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால், மேல்பட்டாம்பாக்கம், புதுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை