உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழையில் விழுந்த மரங்கள் அகற்றம்

மழையில் விழுந்த மரங்கள் அகற்றம்

பண்ருட்டி : பண்ருட்டியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையால், சாலையோரம் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, காந்தி ரோடு படைவீட்டம்மன் தேர் அருகே சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதித்தது. பின்னர், போக்குவரத்து வேறு வழியாக மாற்றிவிடப்பட்டது.அதையடுத்து பண்ருட்டி நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் விழந்திருந்த மரங்களை வெட்டி அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை