உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

புவனகிரி, : புவனகிரியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க, சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டெங்கு காய்சல் அறிகுறியால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு, பொதுமக்களுக்கு வரும் முன் காப்பதற்கான ஆலோசனை வழங்கி வருகின்றனர். புவனகிரி பகுதியில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் தென்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் புவனகிரி பகுதியில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, இப்பகுதியில் சுகாதாரத் துறையினர், டெங்கு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ