உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிணற்றில் விழுந்த பசு இறந்த நிலையில் மீட்பு

கிணற்றில் விழுந்த பசு இறந்த நிலையில் மீட்பு

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே தரைக்கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் இறந்த நிலையில் மீட்டனர்.பெண்ணாடம் அடுத்த சவுந்திரசோழபுரத்தைச் சேர்ந்த பழனிவேல். இவர் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் தனது பசு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.அப்போது, காலை 8:00 மணியளவில் ராமலிங்கம் என்பவரின் வயலில் இருந்த 25 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் பசு மாடு தவறி விழுந்தது.தகவலறிந்து 9:00 மணியளவில் வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள், கிரேன் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் பசு மாட்டை இறந்த நிலையில் மீட்டனர். இது குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !