உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை விரிவாக்க பணிகள் மந்தம் கீரப்பாளையத்தில் தொடரும் பாதிப்பு

சாலை விரிவாக்க பணிகள் மந்தம் கீரப்பாளையத்தில் தொடரும் பாதிப்பு

புவனகிரி: சிதம்பரம் - கீரப்பாளையம் இடையிலான சாலை விரிவாக்கப்பணி மந்தமாக நடப்பதால், வாகன ஒட்டிகள் அவதி தொடர்கிறது.சிதம்பரம்-கீரப்பாளையம் வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, அரசு ரூ. 20.80 கோடி நிதி ஒதுக்கியது. கீரப்பாளையத்தில் இருந்து சிதம்பரம் புறவழிச்சாலையில் இணைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பணிகள் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. அதையடுத்து, சாலையோர மரங்கள் ஏலம் விட்டதில் அதிகாரிகள் செய்த முறைகேட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டது. அதன் பின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு கண்டனர். அதையடுத்து பணிகள் மீண்டும் துவங்கியது. ஆனால், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பணிகள் தொடர்ந்து நடக்காமல், அடிக்கடி கிடப்பில் போடப்பட்டு வருகிறது. அப்படியே பணிகள் துவங்கினாலும் மந்தமாகவே நடந்து வருகிறது.தற்போதைய நிலையில், கீரப்பாளையம் தொடக்க வேளாண் அலுவலகத்தில் இருந்து சாலை விரிவாக்க பணிகளுக்கு தோண்டிய சாலையோர பள்ளத்தை சரி செய்யாமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சாலை விரிவாக்கப்ப பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை