உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 85 லட்சத்தில் கால்வாய் விருதையில் பூமிபூஜை

ரூ. 85 லட்சத்தில் கால்வாய் விருதையில் பூமிபூஜை

விருத்தாசலம், : விருத்தாசலம் கடைவீதி வழியாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்தமாதம் அடைப்பு ஏற்பட்டது.இதனால், கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் குளம்போல் தேங்கி நின்றது. இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடந்தமாதம் நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை இடித்து அகற்றி, அடைப்பை சரி செய்தது.இந்நிலையில், அந்த இடத்தில் ரூ.85 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்க நேற்று பூமிபூஜை போடப்பட்டது. நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார்.கரிமுன்னிசா, தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி