உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிளாஸ்டிக் விற்பனை; கலெக்டர் எச்சரிக்கை

பிளாஸ்டிக் விற்பனை; கலெக்டர் எச்சரிக்கை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் அருண் தம்புராஜ் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால், வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, மேலும், உணவகம், டீ கடை, மளிகை கடை மற்றும் இறைச்சி கடைகளுக்கு பொதுமக்கள் பொருட்கள் வாங்க செல்லும்போது சணல் மற்றும் துணிப்பைகளை கொண்டு செல்ல வேண்டும்.நமது சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் ஆதார பாதுகாப்பு மற்றும் உடல்நலம் ஆகியவற்றின் அவசியம் கருதி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை வரும் 6ம் தேதி முதல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ