மேலும் செய்திகள்
விடையாற்றி உற்சவம்
4 hour(s) ago
பால் வியாபாரி திடீர் மாயம் மனைவி போலீசில் புகார்
4 hour(s) ago
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் சுறுசுறுப்பு
7 hour(s) ago
கடலுார், : கடலுாரில் காவாத்து பயிற்சி பெற்ற புதிய ஊர்காவல் படையினர் எஸ்.பி., ராஜாராமிடம் வாழ்த்துப் பெற்றனர்.கடலுார் மாவட்ட ஊர்க்காவல் படையில் 2024 ஆண்டுக்கான ஊர்க்காவல் படையினர் மற்றும் கடலோர காவல் குழுமம் ஊர்காவல் படையினர் என, 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய ஊர்க்காவல் படையினருக்கு கடந்த 3ம் தேதி முதல் அடிப்படை காவாத்து பயிற்சிகள் கடலுார் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. பயிற்சி நிறைவு நாளில் எஸ்.பி., ராஜாராம் பங்கேற்று பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி அம்ஜத்கான் பயிற்சி முடித்த ஊர்க்காவல் படையினர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பணி நியமனம் செய்தார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி கலாவதி, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், எஸ்.ஐ., மோகன், எழுத்தர் அனீஸ்தீன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
7 hour(s) ago