உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்

சிதம்பரம் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்

கிள்ளை: சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் வி.சி.கட்சி தலைவர் திருமாவளன், அ.தி.மு.க., கூட்டணியில் சந்திரகாசன், பா.ஜ., கூட்டணியில் கார்த்திகாயினி, நாம் தமிழர் கட்சி ஜான்சிராணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று ஓட்டு எண்ணிக்கை அரியலுார் மாவட்டத்தில் நடந்தது. வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார். அதையொட்டி, சிதம்பரம் தொகுதியில் பிரச்னைகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிள்ளை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி