உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எல்லைக்காளியம்மன் கோவிலில் செடல் 

எல்லைக்காளியம்மன் கோவிலில் செடல் 

கடலுார்: கடலுார், பழைய வண்டிப்பாளையம் எல்லைக்காளியம்மன் கோவிலில் 124ம் ஆண்டு செடல் திருவிழா நடந்தது.இக்கோவிலில் 124ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 22ம் தேதி பந்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி 11ம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழாவையொட்டி மகா கணபதி ேஹாமம், 108 சங்காபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, நேற்று முன்தினம் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றில் புனித நீரை ஊற்றுக் காட்டு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு, புனித நீர் அடங்கிய கரகங்களை நேற்று காலை அலங்கரித்து ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.தொடர்ந்து, அம்மனுக்கு 1008 குடநீர் அபிஷேகம், மகா தீபாராதனை, சாகை வார்த்தல், செடல் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை