உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் தற்காலிக மார்க்கெட்டிற்கு இடம் தேர்வு

பண்ருட்டியில் தற்காலிக மார்க்கெட்டிற்கு இடம் தேர்வு

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி காய்கறி மார்க்கெட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.பண்ருட்டி நகராட்சி புதிய மார்க்கெட் கட்டடம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் 5.80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதில் 160 கடைகள், கழிவறைகள், குடிநீர் வசதி, வாகனங்கள் வந்து செல்வதற்கும், லாரிகள் சரக்கு ஏற்றி, இறக்குவதற்கும் வசதிகள் செய்யப்பட உள்ளது.பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போதைய மார்க்கெட்டை தற்காலிக இடத்திற்கு மாற்றுவதற்காக, நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் நேற்று அதிகாரிகளுடன் சென்று சென்னை சாலை ரயில்வே மேம்பால பகுதி, ரயில்வே பகுதியில் இடம் தேர்வு செய்தார்.ஆய்வின்போது நகராட்சி துணை சேர்மன் சிவா, நகராட்சி பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் சண்முகவள்ளிபழனி, குலோத்துங்கசோழன், கிருஷ்ணராஜ்,கதிர்காமன், அவை தலைவர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி