உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேவா மருத்துவமனை 3ம்  ஆண்டு துவக்க விழா

சேவா மருத்துவமனை 3ம்  ஆண்டு துவக்க விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு சேவா மருத்துவமனை மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, இலவச மருத்துவம் முகாம் நடந்தது.புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய முகாமிற்கு, டாக்டர் சேவாமுத்தமிழன் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி மருத்துவக்கல்லுாரி மருத்துவர்கள் பிரேம்குமார், அகிலன், இந்திரா, ராமமூர்த்தி, அக் ஷயா ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். சேரலாதன் வரவேற்றார்.சுற்றியுள்ள கிராம மக்கள் கண் பரிசோதனை பொதுமருத்துவம், சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்தம், நுரையீரல், குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.விருத்தாசலம் நகர மன்ற உறுப்பினர் முருகன், சேகர், பரசுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ