உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்... கிராமத்து இளைஞர்

கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார்... கிராமத்து இளைஞர்

புதுச்சத்திரம்: சிதம்பரம் அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 31, பி.சி.ஏ., பட்டதாரி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், தனது திறமையின் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் விளையாடி வருகிறார்.2012 ம் ஆண்டு கடலூர் மாவட்ட கிரிக்கெட் கிளப்பில் தொடங்கிய, இவரது கிரிக்கெட் பயணம் 2014 ம் ஆண்டு மூன்றாம் தர போட்டியிலும், 2015 ம் ஆண்டு முதல் தற்போது வரையில், சென்னையின் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.2015ம் ஆண்டு துவங்கப்பட்ட தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் லீக் (டி.என்.பி.எல்) போட்டியில், விபி திருவள்ளூர் வீரன்ஸ் அணியில் இடம் பிடித்து 2016 வரை விளையாடினார். 2017 மற்றும் 2018ம் ஆண்டு விபி காஞ்சி வீரன்ஸ் அணியிலும், 2019, 2021ம் ஆண்டுகளில் மதுரை பேந்தர்ஸ் அணியிலும், 2022ம் ஆண்டு பால்ஸி திருச்சி அணியிலும், 2023 முதல் நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.2020ம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரிலும், 2019 மற்றும் 2020, 2021ம் ஆண்டுகளில் விஜய் ஹசாரே தொடரிலும், 2020, 21ம் ஆண்டு சையத் முஸ்தாக் அலி தொடர்களில் பங்கேற்று, ஏராளமான விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிலம்பரசன் தனது அசாத்திய திறமையின் மூலம், தற்போது தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக்கில் விளையாடி வருவது, கடலுார் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், இப்பகுதி இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை