உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

கொத்தட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் விஜயராஜா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு கூரை வீடுகளில் வசிப்பவர்களின் பெயரில் பட்டா இருப்பவர்களுக்கு மட்டும் முதல் தவணையாக பயனாளிகள் தேர்வு செய்து பரிந்துரை செய்யப்பட்டது.கூட்டத்தில், துணை சேர்மன் மோகனசுந்தரம், பேராசிரியர் ரங்கசாமி, வி.ஏ.ஓ., சிவராமன், வார்டு உறுப்பினர்கள் வசந்தா, கவிதா, உமா, மல்லிகா, பற்றாளர் விஜயா, உதவி தோட்டக்கலை அலுவலர் மணிவண்ணன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.ஊராட்சி செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ