உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி

கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி

சிதம்பரம்: சிதம்பரம் கீழமூங்கிலடி யில் ஸ்ரீ ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 25 ஆண்டுகளாக செயல்படும் முன்னணி கல்வி நிறுவனம். இக்கல்லூரி சிதம்பரம், சென்னை புறவழி சாலையில் இயற்கை எழிலுடன், அமைதியான சூழலில் அமைந்துள்ளது. வெள்ளி விழா கொண்டாடும் இக்கல்லூரி 2000ம் ஆண்டு 5 பாடபிரிவுகளுடன் தொடங்கபட்டு, தற்போது 12 இளங்கலை, 5 முதுகலை பிரிவுகளுடன் 2 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லுாரி கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்துடன்செயல்பட்டு வெற்றி நடைபோடுகிறது. இக்கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்புடன் செயல்பட்டு மாணவர்களுக்கு தரமான முழுமையான கல்வியை வழங்குவதை குறிக்கோளாய் கொண்டுள்ளனர். இக்கல்லுரியின் சிறப்பம்சங்கள் பல இருந்தாலும் நல்ல கட்டமைப்பு, தகுதியும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஆசிரியர்கள், சிறந்த நுாலகம், நவீன அறிவியல் மற்றும் கணிப்பொறி ஆய்வகங்கள் ஆகியவை கற்றலுக்கான மிக சிறந்த சூழலை அளிக்கிறது.மாணவிகள் சிரமமின்றி கல்லுாரி வந்து போக, தனியாக சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு 20 க்கும் மேற்பட்ட தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கல்வி அனைவருக்கும் சென்றடைய, அரசாங்க கல்வி உதவித்தொகை, நிர்வாகத்தினர் வழங்கும் கல்வி ஊக்க தொகை, விளையாட்டு மாணவர்களுக்கான சிறப்பு கட்டண சலுகை, போன்ற திட்டங்களால் மாணவ மாணவியர் பயனடைகின்றனர். ஸ்ரீ ராகவந்திரா கல்வி குழுமத்தை சேர்ந்த, இதர கல்வி நிறுவனங்கள் கிடோஸ் சோன் மழலையர் பள்ளி, ஸ்ரீ ராகவேந்திரா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளி, ஸ்ரீ ராகவேந்திரா கல்வியியல் கல்லூரி ஆகியவையும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை