உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவரை தாக்கிய மாணவர்: போலீஸ் விசாரணை

முதியவரை தாக்கிய மாணவர்: போலீஸ் விசாரணை

திட்டக்குடி,: திட்டக்குடியில் முதியவரை பள்ளி மாணவர் தாக்கியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திட்டக்குடியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 65; இவர் நேற்று காலை 9:00 மணியளவில், தனது பேரப்பிள்ளைகளை அழைத்துச் சென்றார். அப்போது வழியில் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். ரோட்டிற்கு செல்லும் வழியில் ஏன் நிற்கிறீர்கள், வழியை விட்டு நில்லுங்கள் என சத்தியமூர்த்தி கூறியதும், அதில் ஒரு மாணவர், சத்தியமூர்த்தியை ஆபாசமாக, திட்டி தாக்கினார்.இதுகுறித்து சத்தியமூர்த்தி, திட்டக்குடி போலீசில் புகார் அளித்தார். திட்டக்குடி போலீசார், பள்ளிக்குச் சென்று, முதியவரைத் தாக்கிய மாணவரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர்.மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முதியவர் புகாரை வாபஸ் பெற்றதால் மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி