உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்கள் மோதல் கடலுாரில் பரபரப்பு

மாணவர்கள் மோதல் கடலுாரில் பரபரப்பு

கடலுார்: கடலுாரில் பள்ளி மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுாரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரே வகுப்பில் பயிலும் பிளஸ் 1 மாணவர்கள் இருவர் நேற்று மாலை பள்ளிக்கு வெளியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது.இதில், ஒரு மாணவருக்கு ஆதரவாக அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் பேசியதால் தகராறு ஏற்பட்டது. பின், உள்ளூர் மாணவர் தனது சக மாணவர்கள் 5 மேற்பட்டோரை பள்ளிக்குள் கட்டைகளுடன் அழைத்து சென்று, அங்கிருந்த எதிர் தரப்பு மாணவரை தாக்க முயன்றார்.தகவலறிந்த கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ென்று, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை