உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்பில் நோய் தாக்குதல் அலுவலர்கள் ஆலோசனை

கரும்பில் நோய் தாக்குதல் அலுவலர்கள் ஆலோசனை

சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதிகளில் சாகுபடி செய்த கரும்பு பயிரில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அலுவலர்கள ஆலோசனை வழங்கினர்.சிறுபாக்கம் பகுதியில் சாகுபடி செய்த கரும்பு பயிரில் நுனி குறுத்து அழுகல் (பொக்க போயிங் நோய்) தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மங்களூர் வேளாண்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்படி, கச்சிமயிலூரில் விவசாயிகள் நோய் தாக்குதல் தடுக்கும் வழிமுறைகள், பூச்சி மருந்துகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இதில் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய நோயியல் துறை இணை பேராசிரியர் ரவிச்சந்திரன், நெமடாலஜி இணை பேராசிரியர்கள் ஜெயக்குமார், அக்ராநமி உதவி பேராசிரியர் வீரமணி, மங்களூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கீர்த்தனா, உதவி வேளாண்மை அலுவலர் கணேஷ்பாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி