உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோடை கால பயிற்சி முகாம்: மாணவர்கள் சேர அழைப்பு

கோடை கால பயிற்சி முகாம்: மாணவர்கள் சேர அழைப்பு

கடலுார் : கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால பயிற்சி முகாம் வரும் 29ம் தேதி துவங்குகிறது. மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 29ம் தேதி முதல், 13ம் தேதி வரை 15 நாட்களுக்கு காலை, மாலை என இரு வேளையும் கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது.முகாமில், பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பாயின்ட் ஆப் சேல் எனும் (பி.ஓ.எஸ்) இயந்திரத்தில் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படும். முகாமில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முகாம் நிறைவு நாளில், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்