உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் சாவில் சந்தேகம் போலீசில் உறவினர்கள் புகார்

பெண் சாவில் சந்தேகம் போலீசில் உறவினர்கள் புகார்

புவனகிரி : புவனகிரி அருகே பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.புவனகிரி அடுத்த மணவெளி ஐயனார் கோவில் திடல்வெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மனைவி வனிதா,35; இவர்களுக்கு 15 வயதில் மகள், 12 வயதில் மகன் உள்ளனர். கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை திடீரென வனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த வனிதா உறவினர்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக புவனகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சந்தேக மரண வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை