உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

கடலுார்,: தமிழ்நாடு பிராமணர் சங்கம், கடலுார் மஞ்சக் குப்பம் கிளை சார்பில் அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கினார். கிளை பொதுச்செயலாளர் பரகாலராமானுஜம் வரவேற்றார். பொருளாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். இதில், இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.பி.எஸ்.சி., பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி பரிசு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.அப்போது, அரிமா மாவட்ட தலைவர் வித்யஸ்ரீ ரவிச்சந்திரன், மகளிர் அணி செயலாளர் ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். உறுப்பினர் கோதண்டராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி