| ADDED : ஜூலை 04, 2024 03:17 AM
கடலுார் : நெய்வேலி ஜவஹர் பள்ளி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெய்வேலியில் உள்ள ஜவஹர் பள்ளியில், 500 மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள், நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்த பின்பு திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.நீண்ட நாட்களாக வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, கொரோனா காலத்தில் வழங்க வேண்டிய சம்பளம், பஞ்சப்படி உள்ளிட்டவைகளை உடனடியாக வழங்க கோரி, வட்டம் 17ல் உள்ள ஜவகர் மெட்ரிக் பள்ளி வளாகம் எதிரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த என்.எல்.சி., அதிகாரிகள் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், நெய்வேலி போலீசார் பேசினார். ஆனால், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல், நள்ளிரவு வரையில் தொடர்ந்தனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஜவஹர் பள்ளியில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்களை ஒருமையில் பேசுகின்றனர். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கூடுதல் சம்பள கொடுத்து பணியாற்ற அனுமதிக்கின்றனர். நீண்ட நாட்கள் பணியில் உள்ள ஆசிரியர்களை நிரந்தரம் செய்யாமல் காலம் கடத்துவதாக குற்றம் சாட்டினர். மேலும், இதுகுறித்து கலெக்டர உரிய விசாரணை செய்து ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 350க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாதல் பரபரப்பான சூழல் நிலவியது.