உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

திட்டக்குடி: திட்டக்குடி அருகே வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.திட்டக்குடி அடுத்த கூடலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் மனைவி லட்சுமி, 54. இவரது மகன் ராஜமகேஸ்வரன், 32. பொறியியல் பட்டதாரி. திருச்சியில் தனியார் கூரியர் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லை என சொந்த ஊரான கூடலுாருக்கு வந்தார்.நேற்று காலை, உளுந்துார்பேட்டையில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு லட்சுமி சென்றிந்த நிலையில், வீட்டிற்குள் துாக்குப்போட்டு, ராஜமகேஸ்வரன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.மதியம் 12:00 மணியளவில் வீட்டிற்கு வந்த லட்சுமி, மகன் இறந்து கிடந்தது கண்டு திடுக்கிட்டார்.இதுகுறித்து ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, ராஜமேஸ்வரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ