உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இளம்பெண் தற்கொலை

இளம்பெண் தற்கொலை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவி துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி, 33; திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சந்தோஷ்குமார் வேலைக்கு செல்லாமல், குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி நேற்று முன்தினம் இரவு வீட்டு படுக்கை அறையில் மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.முத்துலட்சமிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளே ஆகி இருப்பதால், ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை