உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர் மர்ம சாவு: உறவினர்கள் மறியல்

வாலிபர் மர்ம சாவு: உறவினர்கள் மறியல்

நெய்வேலி : என்.எல்.சி., முதல் சுரங்க வளாகத்தில் வாலிபர் இறந்து கிடந்ததில் மர்மம் உள்ளதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.சிதம்பரத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சிவசங்கர்,30; திருமணம் ஆகாதவர்.நெய்வேலி அடுத்த தொப்புலிக்குப்பத்தில் உள்ள தனது சித்தி கனகா வீட்டில் தங்கியிருந்த சிவசங்கர் நேற்று காலை 10:30 மணி அளவில், கனகா வீட்டின் பின்புறமுள்ள என்.எல்.சி., முதல் சுரங்க வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இதனையறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், சிவசங்கரை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அடித்து கொன்றதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் நெய்வேலி தர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர், பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.சிவசங்கர் மர்மமான முறையில் இறந்த கிடந்தது குறித்து நெய்வேலி தர்மல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை