உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீட்டிற்குள் பெண் கொலை துாக்கில் முதியவர் உடல்

வீட்டிற்குள் பெண் கொலை துாக்கில் முதியவர் உடல்

திட்டக்குடி:கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பெருமுளை சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள் மனைவி சின்னப்பொண்ணு, 50.இந்த தம்பதிக்கு, 30, வயதுகளில் இரு மகன்கள் உள்ளனர். கணவரை இழந்த சின்னப்பொண்ணு, கடந்த ஓராண்டாக வதிஷ்டபுரத்தில் தனியாக வசித்தார். மகன் மணிகண்டன் நேற்று தாயை பார்க்க சென்றபோது, சின்னப்பொண்ணுவின் முதுகு மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அருகில், ஜன்னலில், 70 வயது முதியவர் துாக்கில் இறந்து கிடந்தார். தகவலறிந்த திட்டக்குடி போலீசார் இருவரின் உடலையும் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையில், சின்னப்பொண்ணு அருகே துாக்கில் இறந்து கிடந்தவர் பெரம்பலுார் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம், 70, என்பது தெரிய வந்தது.இருவரும் ஏன் இறந்து கிடந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி