உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குரங்குகள் அட்டகாசம் பக்தர்கள் கடும் அவதி

குரங்குகள் அட்டகாசம் பக்தர்கள் கடும் அவதி

விருத்தாசலம்: கோவில்களில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பக்தர்கள் கடும் அவதியடைகின்றனர்.விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில்கள் உள்ளன.இங்கு தினசரி நுாற்றுக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் பூஜைக்கு கொண்டு வரும் பழங்கள், பூக்களை குரங்குகள் வலுக்கட்டாயமாக பறித்து, தின்றும், அழித்தும் நாசம் செய்கின்றன. சுவாமி சிலைகள் மீதுள்ள வஸ்திரங்களை கிழித்து வீசுகின்றன.மேலும் கோவிலுக்கு வரும் குழந்தைகளிடம் இருந்து உணவுப் பொருட்களை பிடுங்கி சாப்பிடுவதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். மன அமைதி தேடி வரும் பக்தர்களுக்கு குரங்குகள் அட்டகாசம் பெரும் மன உளைச்சலை தருகிறது.எனவே, விருத்தாசலம் நகரில் சுற்றித்திரியும் குரங்குகளைப் பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதியில் விட வனத்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை