உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் இரவு 7:30 மணி வரை நடந்த ஒட்டுப்பதிவு

குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் இரவு 7:30 மணி வரை நடந்த ஒட்டுப்பதிவு

வடலுார் : குறிஞ்சிப்பாடி தொகுதியில் இரவு 7:30 மணி வரை நடந்த ஓட்டுப்பதிவில் 77.09சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 274 பேரும்,பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 294 பேரும்,மற்றவை 39 என மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 607 பேரும் உள்ளனர். நேற்று நடந்த லோக்சபா தேர்தலுக்காக 259 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. தொகுதிக்குட்பட்ட பச்சையங்குப்பம், கள்ளையங் குப்பம், நொச்சிக்குப்பம், விலங்கல்பட்டு, குருவப்பன்பேட்டை ஆகிய ஓட்டுச்சாவடிகளில் மின்னணு இயந்திரங்கள் பழுதாகி சிறிது நேரத்தில் வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. மேலும் காலை 7;00 மணி முதல் இரவு 7.30 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியான முறையில் வாக்களித்தனர். அகரம், வானமாதேவி, குமளங்குளம் ஆகிய பகுதிகளில் 6 மணிக்கு மேல் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 7.30 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியின் பல இடங்களில் மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தொகுதியின் இறுதி ஓட்டுப்பதிவு நிலவரப்படி 77.09 சதவீதம் ஓட்டுப் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை