உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துணிக்கடையில் திருடியவர் கைது

துணிக்கடையில் திருடியவர் கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில் துணிக்கடை பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் சடகோபன் நகரை சேர்ந்த விஜயரங்கன் என்பவர், தெற்கு வீதியில் துணிக்கடை வைத்துள்ளார். கடந்த 4 ம் தேதி இரவு கடையை மூடி சென்றவர், மறுநாள் காலையில் பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லா பெட்டியில் இருந்த 20 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.இதுகுறித்து, விஜயரங்கன் கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் ராஜேஷ், 40; என்பவர், துணிக்கைடையின், பூட்டை உடைத்து திருடியது தெரியவந்தது.அதனையடுத்து, ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ