உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அப்பர் கரையேறும் நிகழ்ச்சி கடலுாரில் இன்று நடக்கிறது

அப்பர் கரையேறும் நிகழ்ச்சி கடலுாரில் இன்று நடக்கிறது

கடலுார்: சமணர்கள் கருங்கல்லில் கட்டி கடலில் துாக்கி வீசப்பட்ட திருநாவுக்கரசு நாயனார் என்கிற அப்பரடிகள் அந்த கல்லையே தெப்பமாகக் கொண்டு பழைய வண்டிப்பாளையத்தில் கரை சேர்ந்தார். பின் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் சுவாமியை வழிபட்ட வரலாற்று நிகழ்ச்சியான அப்பர் சுவாமிகள் கரையேறிய வரலாற்றுப் பெருவிழா இன்று 26ம் தேதி காலை பழைய வண்டிப்பாளையத்தில் நடக்கிறது.அதனையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு பாடலீஸ்வரர் கோவிலிலிருந்து விநாயகர், அப்பரடிகள், பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் சுவாமிகள் ரிஷப வாக னங்களில் பழைய வண்டிப்பாளையம் கரையேறவிட்ட நகருக்கு எழுந்தருளி பூரண கும்ப சிறப்பு வரவேற்று நிகழ்ச்சி காலை 8:00 மணிக்கு நடக்கிறது.இரவு 9:30 மணிக்கு தேவாரத் திருமுறை இன்னிசைப் பாராயணத்துடன் அப்பரடிகள், விநாயகர், பாடலீஸ்வரர் சுவாமி, சிவசுப்ரமணிய சுவாமிகள் வீதி உலா எழுந்தருளி வண்டிப்பாளையம் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.இதனைதொடர்ந்து அப்பரடிகளாருடன் பாடலீஸ்வரர் சுவாமி திருப்பாதிரிபுலியூர் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை