உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு திடல் பணி கிடப்பில்

விளையாட்டு திடல் பணி கிடப்பில்

புவனகிரி: உடல் ஆரோக்கியம், குழந்தைகளின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தவும், புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட ஏ.எஸ்.ஆர்., நகர் மற்றும் லட்சுமி கார்டனில், சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் நடை பயிற்சி பாதை, பேட்மிட்டன் விளையாட்டு திடல் அமைக்க அரசு முடிவு செய்தது. அதற்காக, 15 வது மாநில நிதிக்குழுவில் தலா ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரு இடங்களிலும் தலா 1 ஏக்கம் இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிக்கான டெண்டரும் விடப்பட்டது.அதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, விளையாட்டு திடலுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் நுழைவு கேட்டுடன் கூடிய மதிற்சுவர் அமைக்கப்பட்டது. பூங்காவை சுற்றி மதிற்சுவர் அமைத்ததோடு சரி, இரண்டு ஆண்டுகள் ஆகியும் பணி இதுவரை துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.இதனால் அப்பகுதியில் காடுபோல் முட்புதற்கள் மண்டியுள்ளது. இதனால், அரசின் பணம் ரூ. 30 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, மழைக்காலம் துவங்கும் முன், விளையாட்டு திடல் பணியை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை