உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்மன் கோவிலில் திருட்டு

அம்மன் கோவிலில் திருட்டு

திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த ஆலத்துார் பச்சையம்மன் கோவில் உண்டியல் மற்றும் வெள்ளி கிரீடம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமநத்தம் அடுத்த வ.சித்துார் கிராமத்தில் பச்சையம்மன், மன்னாதீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வந்து பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் மற்றும் பீரோவில் இருந்த அம்மன் வெள்ளி கிரீடம் கொள்ளை போனது தெரியவந்தது. தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும், புகாரின் பேரில், வழக்குப் பதிந்து கோவிலில் புகுந்த கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை