உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்

மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்தவர் நெப்போலியன் மகன் வணங்காமுடி, 26; இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் தனது தாய், தந்தையுடன் வீட்டின் வராண்டாவில் துாங்கிக் கொண்டிருந்தார். காலை 5:30 மணியளவில் எழுந்து பார்த்தபோது அருகில் வைத்திருந்த மொபைல் போனைக் காணவில்லை.இதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா, மணிவண்ணன், சந்திரகாசி ஆகியோரது வீடுகளிலும் மொபைல் போன் திருடு போயுள்ளது.புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், பதிவான 2 மர்ம நபர்கள் மொபைல் போனை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதன் பேரில் போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி