உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளியில் நுழைந்து புத்தகம் சான்றிதழ்களுக்கு தீ வைப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு

பள்ளியில் நுழைந்து புத்தகம் சான்றிதழ்களுக்கு தீ வைப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் இருந்த முக்கிய ஆவணங்களை மர்மநபர்கள் தீவைத்து கொளுத்திய சம்பவம் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில், ஆதி திராவிட நல பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் நேற்று இந்த பள்ளியில் இருந்த புத்தகம் மற்றும் சான்றிதழ்களை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இதனால் பள்ளி வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இருந்தும், மாணவர்களின் சான்றிதழ் மற்றும் புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின.பொதுமக்கள் கூறுகையில், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து புத்தகம் மற்றும் சான்றிதழ்களை தீயிட்டுக் கொளுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை வைத்தனர்.மேலும், பள்ளி வளாகத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் எனக் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்