உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்

குட்டியாண்டவர் கோவிலில் இன்று திருக்கல்யாணம்

கடலுார்: செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவிலில் இன்று மதியம் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.கடலுார், செல்லங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவில் கும்பாபிஷேக21ம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று 20ம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது.அதனையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, 108 சங்கு பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடக்கிறது . தொடர்ந்து காலை 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், 11:00 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்