உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மருத்துவமனையில் திரம்போலைசிஸ் சிகிச்சை

கடலுார் மருத்துவமனையில் திரம்போலைசிஸ் சிகிச்சை

கடலுார் : பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு, கடலுார் சுரேந்திரா மருத்துவமனையில் திரம்போலைசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.பக்கவாதம் ஏற்பட்டால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மற்றவரை எதிர்பார்த்து வாழ்நாள் முழுவதும் கை கால்கள் செயலிழந்து வாழும் நிலை இருந்தது. ஆனால் தற்போது 'திரம்போலைசிஸ்' சிகிச்சையால் பலர் குணமாகி வருகின்றனர். சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே இச்சிகிச்சை செய்யப்பட்டு வந்தது. அதுபோன்ற வசதி தற்போது கடலுாரில் கிடைக்கிறது.கடலுார் முதுநகரை சேர்ந்த நுார் முகமது 40; என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு நரம்பியல் டாக்டர் அமிர்தலட்சுமி 'திரம்போலைசிஸ்' சிகிச்சை அளித்து குணமாக்கி உள்ளார். சுரேந்திரா பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர், சேர்மன் ராஜேந்திரன் ஆகியோருக்கு, குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை