உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு விருத்தாசலத்தில் பயிற்சி 

ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு விருத்தாசலத்தில் பயிற்சி 

விருத்தாசலம், : விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் பணியாற்று பவர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் நடந்த பயிற்சியை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத் மெஹ்மூத் துவக்கி வைத்தார். தாசில்தார் உதயகுமார், துணை தாசில்தார்கள் முருகேஸ்வரி, கோவிந்தன், செல்வமணி முன்னிலை வகித்தனர்.இதில், ஓட்டுச்சாவடி பணியாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது, வாக்கு சாவடிக்கு தேவையான படிவங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது, வாக்கு சாவடி மையத்தில் ஏற்படும் பிரச்னைகளை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டது.அதன்பின், மின்னணு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் சரி செய்வது குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ