உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / த.வீ.செ. பள்ளி மாணவர்களுக்கு தினமலர் -பட்டம் இதழ் வழங்கல்

த.வீ.செ. பள்ளி மாணவர்களுக்கு தினமலர் -பட்டம் இதழ் வழங்கல்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.பள்ளி மாணவ மாணவிகளின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, பாடம் சார்ந்த அறிவு, நாட்டு நடப்புகள், அறிவியல் அறிஞர்களின் ஆராய்ச்சிகள், விஞ்ஞான அறிவை வளர்க்கும் தகவல்கள்,உள்ளிட்ட தகவல்களை மாணவர்களுக்கு சுருக்கமாகவும், எளிதில் புரியும் வகையிலும் வழங்கும் நோக்கத்துடன் 'தினமலர் -பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளிவருகிறது.பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், எதிர்கால தலைமுறையின் வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் நோக்கத்தில் அக்கறைகொண்ட பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு 'தினமலர் -பட்டம்' இதழ் வழங்கப்பட்டு வருகிறது.இதனடிப்படையில் ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ. மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயலர் செந்தில்நாதன், முதல்வர் ஆர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு முதல் கட்டமாக பள்ளியில் பயிலும் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 200 மாணவ மாணவிகளுக்கு 'பட்டம்' இதழை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ