உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இரண்டு ஏக்கர் சவுக்கு மரம் தீயில் எரிந்து சேதம்

இரண்டு ஏக்கர் சவுக்கு மரம் தீயில் எரிந்து சேதம்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே தீ பிடித்து இரண்டு ஏக்கரின் பயிர் செய்திருந்த சவுக்கு மரங்கள் எரிந்து சேதமடைந்தது.பண்ருட்டி அடுத்த திருவாமூர் ஊராட்சி காமாட்சிபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்.இவர் 2 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு பயிர் சகுபடி செய்திருந்தார். 2 ஆண்டுகளான சவுக்கு மரங்கள் வளர்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள வயலில் சவுக்கு தழைகளை எரித்துள்ளனர். அந்த நெருப்பு காற்றின் வேகத்தில் பிரகாஷ் வயலில் உள்ள சவுக்கு மரத்தில் தீபரவி காற்றின் வேகத்தில் 2 ஏக்கரில் சவுக்கு மரங்களை மள மளவேன தீப்பிடித்து எரிந்து சேதமானது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.பிரகாஷ் புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி