உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டாஸ்மாக் மது விற்ற இருவர் கைது

டாஸ்மாக் மது விற்ற இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர். முகுந்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த திருமலை, 50; குறிஞ்சிப்பாடி வட்டம், அம்பலவாணன்பேட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல், 42, ஆகியோர் விருத்தாசலம் பஸ் நிலையம் பகுதியில், கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 5மதுபாட்டில் மற்றும் 6 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ