உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

விருத்தாசலம்: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பஸ் நிலையம் மற்றும் ராமச்சந்திரன்பேட்டை திருமண மண்டபம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், ஆலடிரோடு, ராஜேந்திரன் மகன் ராஜ்குமார், 35, ராமச்சந்திரன்பேட்டை மகேந்திரன், 65, என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரிந்தது. அவர்களை கைது செய்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ