உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வீராணம் ஏரி தண்ணீரில் நுரை: மக்கள் அச்சம்

வீராணம் ஏரி தண்ணீரில் நுரை: மக்கள் அச்சம்

கடலுார், : வீராணம் ஏரி தண்ணீர் நிறம் மாறி, நுரையுடன் காணப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.காட்டுமன்னார்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. 1,465 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு உடைய இந்த ஏரி மூலம், டெல்டா பகுதியில் 45,000 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது. மேலும், ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில் ஏரியில் உள்ள தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ள நிலையில் வெள்ளை நிற நுரை அதிக அளவில் கரை ஓரம் ஒதுங்கி வருகிறது. இதனால், ஏரியில் நச்சு கலந்த கழிவு நீர் கலந்திருக்குமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, அதிகாரிகள் தண்ணீரை ஆய்வு செய்து, ஏரியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி