உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி ரயில் நேரம் மாற்றம்

கடலுார் வழியாக இயக்கப்படும் வேளாங்கண்ணி ரயில் நேரம் மாற்றம்

கடலுார் : கடலுார் வழியாக வாரம் இருமுறை இயக்கப்படும் வேளாங்கண்ணி-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வேளாங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூருக்கு, வாரம் இருமுறை விரைவு ரயில் (06038), சனி மற்றும் திங்கள்கிழமை சென்று வந்தது. வேளாங்கண்ணியில் இருந்து மாலை 2:45க்கு புறப்படும் ரயில், சென்னை எழும்பூருக்கு இரவு 1:30க்கு சென்றடைந்தது. தற்போது இந்த ரயில் நேரம் வரும் 24ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணியில் சனி மற்றும் திங்கள் கிழமைகளில் மாலை 7:10க்கு புறப்படும் ரயில் நாகப்பட்டினத்திற்கு 7:30 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 9:38, சிதம்பரத்திற்கு 10:23, கடலுார் முதுநகர் 10:55, திருப்பாதிரிப்புலியூர் 11:04 மணிக்கும், விழுப்புரத்திற்கு12:25, தாம்பரம் அதிகாலை 2:33, சென்னை எழும்பூர் காலை 3:20 மணிக்கு சென்றடையும்.அதேப்போல ஞாயிறு மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் இருந்து பறப்பட்டு வேளாங்கண்ணியை சென்றடையும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை