உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள்

காட்சி பொருளான கண்காணிப்பு கேமராக்கள்

கடலுார் மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை கண்காணித்து, குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண, சி.சி.டி.வி., கேமராக்கள் நிறுவப்பட்டன. ஆரம்பத்தில், மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய நகர வீதிகளில் போலீசார் சார்பில் அமைக்கப்பட்டன.அந்த வகையில், தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதியில் மாவட்டம் முழுவதும் ஏராளமான கேமிராக்கள் அமைக்கப்பட்டது. ஆனால், அவைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை.கடலுார் மாநகரை பொருத்தவரையில், சி.சி.டி.வி.,க்களை கண்காணிக்க, எஸ்.பி., அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. அடுத்து, அந்தந்த போலீஸ் நிலையத்தில் இருந்து கண்காணிக்க வசதி செய்யப்பட்டது. இதனால், எந்த இடத்தில் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சி.சி.டி.வி., உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து தனியார் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, தற்போது கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவைகள் முறையாக பராமரிக்கப்படாமல், பல இடங்களில் காட்சி பொருளாாக மாறியுள்ளது.கடலுாரில் போலீசார் சார்பில் பாரதி வீதி, சப் ஜெயில், கஸ்டம்ஸ் சாலை-குண்டுசாலை இணைப்பு சாலை உட்பட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட கேமராக்கள் செயலிழந்து, பயனற்றதாக உள்ளது.குற்ற சம்பவங்கள் அதிகம் நடந்தபோதும், சி.சி.டி.வி., கேமராக்கள் சீரமைக்கப்படவில்லை. பல இடங்களில் கேமராக்கள் உடைந்த நிலையிலும், சில இடங்களில் கேமரா இருந்த இடத்தில் கேமரா திருடப்பட்டு, ஒயர் மட்டுமே உள்ளது.இதனால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசார் தடுமாறி வருகின்றனர். குற்றவாளிகளும் தைரியமாக குற்ற சம்பவங்களை அறக்கேற்றி வருகின்றனர்.எனவே, கடலுாரில் குற்றச்செயல்களை தடுக்க பழுதாகியுள்ள கேமராக்களை சீரமைக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை